Tuesday, December 7, 2010

கலைஞருக்கு ஒரு சிறிய திறந்த மடல்

மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களே,

உங்களமாதிரி உடன் பிறப்பிற்கு உணர்ச்சி கடிதம் எனக்கு எழுத தெரியாது. எனக்கு உங்கள மாதிரி அறிவு கிடையாது.  உங்க அறிவை புகழ்ந்து தான் இந்த கடிதமே.
ஒரு சாதாரண தமிழனின் கடிதம் இது.  நீங்க நல்லா இருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஆனா நாங்க நல்லா இல்லை. எப்படி இருக்க முடியும். நாட்டுலே நடக்கிறத பார்த்த நிம்மதியா சாப்பிட முடியல தூங்க முடியல. 

அது எப்படி தலைவரே இந்த வயசுலே இவ்வளவு பல்டி அடிக்கிறீங்க. என்ன தான் தமிழை (தமிழ்நாட்டை)நீங்க குத்தகை எடுத்திருந்தாலும் அதற்காக என்ன வேணா பேசலாமா?


முதல அ. ராசா உத்தமர்னு சொன்னீங்க.  நீங்க சொன்னத வச்சு நான் வேற இந்த சிகப்பு காரங்க கிட்ட எங்க தலைவர் உண்மை மட்டும் தான் பேசுவார்னு சொல்லி ராசா உத்தமர்னு சொன்னேன்
அப்புறம்  பார்த்தா ராசா மானஸ்தன் அதனால ராஜினாமா செய்தார்னு சொன்னீங்க.நானும் நீங்க சொன்னத வச்சு ராசா மானஸ்தன் சொன்னேன்.
அப்புறம் ராசா ஒரு ஆளு எப்படி ஊழல் செய்ய முடியும் கேட்டிங்க? சரியான பாயிண்ட்ன்னு நான் குதிச்சேன்.
 அப்புறம் நீங்க என்ன சொன்னீங்க? ஊழல் நடந்திருக்குன்னு  ஒரு பேச்சுக்கு வைத்துகொண்டாலும், 1950 களில் TTK ஊழலுக்காக ராஜினாமா செய்தபிறகு யாரும் ஒன்னும் சொல்லலே, ஆனா ராசா ராஜினாமா செய்தாலும் ஏன் கூப்பாடு போட்ராங்குனு,  ஒரு கேள்வி கேட்டிங்கேலே  அப்பகூட ஒரு மைல்ட் டவுட் வரல. 
கடசியா சொன்னீங்களே இவ்வளவு பெரிய தொகைய எப்படி சாப்பிட முடியும்னு கேட்டிங்களே அப்பத்தான் டவுட் வந்தது. அப்ப சாப்பிட்டிருக்கீங்க ஆனா புல்லா சாப்பிடல.

என்ன புழைப்பு இது. நீங்க கதை எழுதி சம்பாதித்த 5  கோடிக்கு மேல உங்க கிட்ட சொத்து இல்லன்னு நான் சொல்லிடிருந்தேன்,  நீங்க என்னடானு சினிமாக்கு டயலாக் எழுதறதுக்கு பதிலாக எங்களுக்கு கதை எழுதி காதில பூ சுத்ரீங்கள இது நியாமா? 

பேச்சுக்கு நூறு முறை ராசா தலித்னு சொல்றீங்களே தமிழ்நாட்டுல கோடி கணக்கான தலித்துகள் ஒரு வேலை சோறு இல்லாமல் சாவறான் அவனை பற்றி ஒரு நாளாவது பேசி இருக்கீங்களா.  உத்தபுரம் தலித்துகள் மனிதர்களாக வாழ ஆசைபட்டா அவங்க மேல கேச போடறீங்க. கோயிலுக்குள் தலித்துகள் போனா,  போலீஸ் பொறிக்கியா மாதிரி தலித்துகளை நாய் அடிக்கிற மாதிரி அடிக்க சொல்றீங்க. அப்பெல்லாம் எங்க போச்சு உங்க தலித் பாசம்.


சோத்துக்கு இல்லைனாலும் உன் தமிழுக்காக உன் பேச்சில மயங்கி உன் பின்னாடி வந்த எங்கள இப்படி மோசம் பண்ணிடிங்களே.  நீங்க நல்லா இருங்க. காலம் மாறும். உழைக்கிற நாங்க ஆட்சிக்கு வருவோம். அப்ப உங்க அறிவை ஆராய்ச்சி செய்வோம்.

2 comments:

  1. ராசா என்கிற ஒரு தலித்தின் நலன் காக்க குரல் கொடுக்கும் தலைவர்களுக்கு
    சில கேள்விகள்

    அரசு, மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலியிடங்கள் நிரப்பப் படாததால் வேலை வாய்ப்பை இழக்கும் தலித் இளைஞர்கள் பற்றி என்றாவது நீங்கள் கவலைப்பட்டது உண்டா?

    முடக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் வெளியாக என்ன செய்தீர்கள்?

    அரசு ஊழியர்களாக வேண்டும் என்று கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருடங்களாக
    போராடி வரும் சத்துணவு ஊழியர்களிலும் போராட்டம் நடத்தியதற்காக
    பணி நீக்கம், இடை நீக்கம் செய்யப்பட்ட தலைவர்களிலும் உள்ள தலித்துக்கள்
    பற்றி யோசித்தது உண்டா?

    குடியாத்தத்தில் ஆளும் கட்சி குண்டர்களால் வீடு இடிக்கப்பட்டு நடுத்தெருவில்
    நிற்கும் அருந்ததிய ஆதி திராவிடக் குடும்பங்கள் உங்கள் கண்ணில் படவேயில்லையா?

    Dear Comrade, Kindly visit
    www.ramaniecuvellore.blogspot.com

    Raman, Vellore

    ReplyDelete
  2. ithuthan thamil nattil ulla anaithu unmaiyana thi mu ka vinarin ullak kumural

    ReplyDelete