Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Tuesday, December 7, 2010

கலைஞருக்கு ஒரு சிறிய திறந்த மடல்

மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களே,

உங்களமாதிரி உடன் பிறப்பிற்கு உணர்ச்சி கடிதம் எனக்கு எழுத தெரியாது. எனக்கு உங்கள மாதிரி அறிவு கிடையாது.  உங்க அறிவை புகழ்ந்து தான் இந்த கடிதமே.
ஒரு சாதாரண தமிழனின் கடிதம் இது.  நீங்க நல்லா இருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஆனா நாங்க நல்லா இல்லை. எப்படி இருக்க முடியும். நாட்டுலே நடக்கிறத பார்த்த நிம்மதியா சாப்பிட முடியல தூங்க முடியல. 

அது எப்படி தலைவரே இந்த வயசுலே இவ்வளவு பல்டி அடிக்கிறீங்க. என்ன தான் தமிழை (தமிழ்நாட்டை)நீங்க குத்தகை எடுத்திருந்தாலும் அதற்காக என்ன வேணா பேசலாமா?


முதல அ. ராசா உத்தமர்னு சொன்னீங்க.  நீங்க சொன்னத வச்சு நான் வேற இந்த சிகப்பு காரங்க கிட்ட எங்க தலைவர் உண்மை மட்டும் தான் பேசுவார்னு சொல்லி ராசா உத்தமர்னு சொன்னேன்
அப்புறம்  பார்த்தா ராசா மானஸ்தன் அதனால ராஜினாமா செய்தார்னு சொன்னீங்க.நானும் நீங்க சொன்னத வச்சு ராசா மானஸ்தன் சொன்னேன்.
அப்புறம் ராசா ஒரு ஆளு எப்படி ஊழல் செய்ய முடியும் கேட்டிங்க? சரியான பாயிண்ட்ன்னு நான் குதிச்சேன்.
 அப்புறம் நீங்க என்ன சொன்னீங்க? ஊழல் நடந்திருக்குன்னு  ஒரு பேச்சுக்கு வைத்துகொண்டாலும், 1950 களில் TTK ஊழலுக்காக ராஜினாமா செய்தபிறகு யாரும் ஒன்னும் சொல்லலே, ஆனா ராசா ராஜினாமா செய்தாலும் ஏன் கூப்பாடு போட்ராங்குனு,  ஒரு கேள்வி கேட்டிங்கேலே  அப்பகூட ஒரு மைல்ட் டவுட் வரல. 
கடசியா சொன்னீங்களே இவ்வளவு பெரிய தொகைய எப்படி சாப்பிட முடியும்னு கேட்டிங்களே அப்பத்தான் டவுட் வந்தது. அப்ப சாப்பிட்டிருக்கீங்க ஆனா புல்லா சாப்பிடல.

என்ன புழைப்பு இது. நீங்க கதை எழுதி சம்பாதித்த 5  கோடிக்கு மேல உங்க கிட்ட சொத்து இல்லன்னு நான் சொல்லிடிருந்தேன்,  நீங்க என்னடானு சினிமாக்கு டயலாக் எழுதறதுக்கு பதிலாக எங்களுக்கு கதை எழுதி காதில பூ சுத்ரீங்கள இது நியாமா? 

பேச்சுக்கு நூறு முறை ராசா தலித்னு சொல்றீங்களே தமிழ்நாட்டுல கோடி கணக்கான தலித்துகள் ஒரு வேலை சோறு இல்லாமல் சாவறான் அவனை பற்றி ஒரு நாளாவது பேசி இருக்கீங்களா.  உத்தபுரம் தலித்துகள் மனிதர்களாக வாழ ஆசைபட்டா அவங்க மேல கேச போடறீங்க. கோயிலுக்குள் தலித்துகள் போனா,  போலீஸ் பொறிக்கியா மாதிரி தலித்துகளை நாய் அடிக்கிற மாதிரி அடிக்க சொல்றீங்க. அப்பெல்லாம் எங்க போச்சு உங்க தலித் பாசம்.


சோத்துக்கு இல்லைனாலும் உன் தமிழுக்காக உன் பேச்சில மயங்கி உன் பின்னாடி வந்த எங்கள இப்படி மோசம் பண்ணிடிங்களே.  நீங்க நல்லா இருங்க. காலம் மாறும். உழைக்கிற நாங்க ஆட்சிக்கு வருவோம். அப்ப உங்க அறிவை ஆராய்ச்சி செய்வோம்.